மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் - பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டத்தில் மோடி, அமித் ஷா
ஆலோசனை கூட்டத்தில் மோடி, அமித் ஷா
Published on

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பிறமாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்த கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் வரவேற்று கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com