சட்டசபை இடைத்தேர்தல் - 32 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் அறிவிப்பு

இடைத்தேர்தல் நடக்க உள்ள 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

மராட்டிய, அரியானா சட்டசபை தேர்தலுடன் 18 மாநிலங்களில் 64 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21–ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இதில் இடைத்தேர்தல் நடக்க உள்ள 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.

உத்தரபிரதேசம்–10, கேரளா–5, அசாம்–4, இமாசலபிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகியவற்றில் தலா –2, பீகார், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மேகாலயா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் தலா–1 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com