ஒடிசாவின் பிஜேபூர் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் தோல்வி

ஒடிசா மாநிலம் பிஜேபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தி ஆளும் பிஜு தனதா தளம் கட்சியின் வேட்பாளர் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #BijepurBypoll
ஒடிசாவின் பிஜேபூர் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் தோல்வி
Published on

புபனேஷவர்:

ஒடிசா மாநிலம் பிஜேபூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் சுபால் சாஹு மரணமடைந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் ரிதா சாஜு, பா.ஜ.க சார்பில் அஷோக் பனிக்ராஜி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரனாய் சாகு போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பிஜு தனதா தளம் வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பிஜு தனதா தளம் வேட்பாளர் ரிதா சாஜு 1,02,871 வாக்குகள் பெற்று சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பா.ஜ.க வேட்பாளர் 60,938 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 10,274 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், “ பிஜு ஜனதா தளம் கட்சியை பொதுமக்கள் வெற்றி பெறச்செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 2019-ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்” என தெரிவித்தார். #BijepurBypoll #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com