பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. #BBL07 #HobartHurricanes #PerthScorchers
பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் வெற்றி
Published on

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. ஹோபார்ட் நகரில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஹோபார்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டார்கி ஷார்ட் 42 ரன்களும், மேத்தீவ் வேட் 41 ரன்களும், டெனியல் கிறிஸ்டேன் 28 ரன்களும் எடுத்தனர். சிட்னி அணி பந்துவீச்சில் சீன் அபோட் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஒவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிட்னி அணியின் சாம் பில்லிங்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் (31 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தார். அவரைத்தவிர ஜோர்டன் சில்க் 45 ரன்களும், டெனியல் ஹியூஸ் 33 ரன்களும் எடுத்தனர். ஹோபார்ட் அணியின் தைமால் மில்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். சிட்னி அணியின் சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பெர்த் நகரில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெர்த் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் விளையாடிய மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. மெல்போர்ன் அணியின் கேமரான் ஒயிட் 68 ரன்களும், டாம் கூப்பர் 57 ரன்களும், மார்கஸ் ஹாரிஸ் 48 ரன்களும் எடுத்தனர். பெர்த் அணியின் அண்ட்ரூ டை 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் அணி விளையாடியது. அந்த அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெர்த் அணியில் அதிகபட்சமாக அஷ்டன் டர்னர் 32 பந்துகளில் 70 ரன்கள் ( 3 பவுண்டரி, 5 சிக்ஸர் ) எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வில்லி 55 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடி 70 ரன்கள் அடித்த பெர்த் அணியின் அஷ்டன் டர்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com