பாகூர் அருகே நோய் கொடுமையால் டிரைவர் தற்கொலை

பாகூர் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on: 

பாகூர்:

பாகூர் ஜெயராமன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 56). டிரைவர். இவருக்கு சக்திகலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசனுக்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நோய் கொடுமையால் அவதி அடைந்து வந்தார்.

இதனால் கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனே அவரை குடும்பத்தினர் காப்பாற்றினர். 

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று காலை மின் விசிறியில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X