

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் என்ற பெயரில் தள்ளுபடி மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இன்று (அக்டோபர் 14) துவங்கியுள்ள சிறப்பு விற்பனை அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி, எக்சேஞ்ச் சலுகை மற்றும் கேஷ்பேக் உள்ளிட்ட ஆப்ஷன்கள் பிரீமியம் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் சலுகை மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஐபோன் 7 (32 ஜிபி):
ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஐபோன் 7 (32 ஜிபி) விலை ரூ.49,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 7 (32 ஜிபி) ரோஸ் கோல்டு, கோல்டு மற்றும் சில்வர் நிற மாடல்கள் விலை ரூ.38,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் ஆன் மேக்ஸ்:
சாம்சங் ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.16,900-ல் இருந்து ரூ.1000 தள்ளுபடி மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,900-க்கு வாங்க முடியும்.
சியோமி Mi A1 விற்பனை:
சியோமியின் சமீபத்தில் அறிமுகம் செய்த Mi A1 ஸ்மார்ட்போன் இன்றஉ விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுவதோடு பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
ஹானர் 9i:
ஹூவாய் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 9i ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் இன்று முதல் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஆண்டு பைபேக் கியாரண்டி சலுகையில் கிடைக்கும் ஹானர் 9i, வாங்குவோர் ஒரு ஆண்டிற்கு பின் எக்சேஞ்ச் செய்யும் போது 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S7:
சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.43,400க்கு விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி S7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.29,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன் பிரான்டுகளின் பல்வேறு மாடல்கள், லேப்டாப், கேமரா போன்ற மின்சாதனங்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் மின்சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கப்பட்டுள்ளது.