இண்டர் ஸ்டேட் டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணியை வீழ்த்தியது பெங்கால்

சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி தொடரில் தமிழ்நாடு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்கால் அணி வெற்றி பெற்றது. #TNvBEN #MushtaqAliT20
இண்டர் ஸ்டேட் டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணியை வீழ்த்தியது பெங்கால்
Published on

கொல்கத்தா:

ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் விஜய் சங்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தமிழ்நாடு அணியின் பரத் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பரத் ஷங்கர் ஒரு ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 17 பந்துகளில் 22 ரன்கலும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாபா அப்ரஜித் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின் வந்த கேப்டன் விஜய் சங்கர் 27 ரன்களும், அனிருதா ஸ்ரீகாந்த் 37 ரன்களும் சேர்க்க தமிழ்நாடு 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணியின் கனிஷ்க் செத் 3 விக்கெட்களும், சயன் கோஷ், ஆமிர் கனி ஆகியோர் தலா 2 விக்கெட்களும், அசோக் திண்டா, மனோஜ் திவாரி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களமிறங்கியது. ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, விவேக் சிங்  தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கோஸ்வாமி, வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். விவேக் சிங் 21 ரன்கல் எடுத்திருந்த நிலையில் அதிசயராஜ் டேவிட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சுதிப் சட்டர்ஜியும், விரித்திக் சட்டர்ஜியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்குவித்தனர். விரித்திக் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சுதிப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். பெங்கால் அணி 16.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்கால் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுதிப் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

பரோடா - உத்தரப்பிரதேசம் இடையிலான ஆட்டத்தில் உத்தரப்பிரதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #TNvBEN #MushtaqAliT20

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com