இந்தியாவில் டெஸ்ட்டிங் செய்யப்படும் பென்லி மோட்டோபி-250 பேடகோனியன் ஈகிள்

பென்லியின் மோட்டோபி-250 போடரோனியன் ஈகிள் இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது. புகைப்படங்களில் வெளியகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் டெஸ்ட்டிங் செய்யப்படும் பென்லி மோட்டோபி-250 பேடகோனியன் ஈகிள்
Published on

புதுடெல்லி:  

இத்தாலியின் 1911-ம் ஆண்டு துவங்கப்பட்ட மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி இன்று வரை சர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமான பிரான்டாக விளங்கி வருகிறது. இத்துடன் பல்வேறு மோட்டார்சைக்கிள் ரேசர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் பிரான்டாகவும் இது இருக்கிறது.   

புத்தம் புதிய பென்லி மோட்டோபி-250 பேடகோனியன் ஈகிள் மாடல் பூனேவில் டெஸ்டிங் செய்யப்படுவது தெரியவந்துள்ளது. டெஸ்டிங்கின் போது முழுமையாக தயாரான நிலையில் காணப்படும் பென்லி வரும் மாதங்களில் புதிய மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மோட்டோபி-250 பேடகோனியன் ஈகிள் அந்நாட்டில் ருபியா 35,600,000  அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,70,153 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் 251.8சிசி 2-வால்வ், லிக்விட் கூல்டு பேரலெல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 17.4 bhp திறன் 8,000 rpm மற்றும் 16.5 Nm டார்கியூ 6,000 rpm செயல்திறன் கொண்டுள்ளதோடு 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. 

வழக்கமான ஃபோர்க்கள் 120 மில்லிமீட்டர் அளவில் முன்பக்கமாக சஸ்பென்ட் செய்யப்பட்டு பின்புறம் 70 மில்லிமீட்டர் அளவில் டூயல் காயில் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் சிங்கிள் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் வகையை சேரந்த பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 

14-லிட்டர் எரிபொருள் டேன்க்கர் கொண்ட இந்த பைக்கின் மொத்த எடை 145 கிலோ ஆகும். தலைசிறந்த அம்சங்கள் நிறைந்த பென்லி மாடலன் விலை சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பென்லி இந்தியாவில் பஜாஜ் அவென்ஜர் 220, UM ரெனெகேடு கமாண்டோ, ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, கிளாசிக் 350 மற்றும் தன்டர்பேர்ட் 350 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com