பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் இழந்தது..ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் பாய்ந்து பாய்ந்து கேட்ச்களை பிடித்தார். அவர் ஐந்து பேரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.