

இந்த சீசனில் பார்சிலோனா 29 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போட்டி வந்தது. இந்நிலையில் கோபா டெல் ரே ஸ்பெயின் சூப்பர் கோப்பை தொடரின் காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனா, எஸ்பான்யல் அணியை எதிர்கொண்டது.
எஸ்பான்யல் அணி சொந்த மைதானத்தில் பார்சிலோனாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 62-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடிக்க தவறிவிட்டார்.
பின்னர் 88-வது நிமிடத்தில் எஸ்பான்யல் ஒரு கோல் அடித்தது. இதனால் பார்சிலோனா 0-1 என தோல்வியடைந்தது. தொடர்ந்து 29 வெற்றிகளை பெற்று வந்த பார்சிலோனா, மெஸ்சியின் பெனால்டி வாய்ப்பு சொதப்பலால் தடைபட்டது.