வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 409 ரன்கள் குவிப்பு

டாக்காவில் நடைபெற்று வரும் வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 409 ரன்கள் குவித்துள்ளது.
92 ரன்கள் அடித்த சில்வா
92 ரன்கள் அடித்த சில்வா
Published on

வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நேற்று தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. போனர் 74 ரன்களுடனும், ஜோசுவா டா சில்வா 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. போனர் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். மறுமுனையில் விளையாடிய சில்வா அரைசதம் அடித்து சதத்தை நோக்கிச் சென்றார். இவரும் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 82 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 409 ரன்கள் குவித்தது.

வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜயத், தைஜுல் இஸ்லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சில் தொடங்கிய வங்காளதேசம் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com