

டெஸ்ட் போட்டிற்கு முன்பு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதல் டெஸ்டில் கலந்து கொள்ளவில்லை.
8-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷாகிப் அல் ஹசன் 2-வது டெஸ்டில் இடம்பெற மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சபீர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்சாமுல் இஸ்லாம், ருபெல் ஹொசைன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஷாகிப் அல் ஹசன் இடம்பெறாததால் மெஹ்முதுல்லா 2-வது டெஸ்டிலும் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிற்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-