இலங்கைக்கு எதிரான டி20 தொடரில்- வங்காள தேச அணியில் 5 புதுமுக வீரர்கள்

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான வங்காள தேசம் அணியில் U19 துணைக் கேப்டன் உள்பட 5 புதுமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். #BANvSL
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில்- வங்காள தேச அணியில் 5 புதுமுக வீரர்கள்
Published on

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), 2. தமிம் இக்பால், 3. சவுமியா சர்கார், 4. முஷ்பிகுர் ரஹிம், 5. மெஹ்முதுல்லா, 6. சபீர் ரஹ்மான், 7. முஸ்டாபிஜூர் ரஹ்மான், 8. ருபெல் ஹொசைன், 9. மொகமது சாய்புதீன், 10. அபு சைதர், 11. அபு ஜயேத், 12. அரிபுல் ஹக்யூ, 13. மஹெதி ஹாசன், 14. ஜகிர் ஹாசன், 15. ஆபிஃப் ஹொசைன்.

இதில் அபு ஜயேத் 2017 வங்காள தேச பிரி்மீயர் லீக்கில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரராவார். மஹெதி ஹாசனுக்கும் இடம் கிடைத்துள்ளது. இவர் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர். பேட்ஸ்மேன் அரிபுல் ஹக், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜகிர் ஆகியோரும் பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியவர்கள்.

காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 அணியில் இடம்பெறாத தமிம் இக்பால், முஸ்டாபிஜூர் ரஹ்மான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com