ஆப்கானிஸ்தான் முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்: ரஹ்மத் ஷா சதம் அடித்து சாதனை

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் அடித்துள்ளது.
ரஹ்மத் ஷா
ரஹ்மத் ஷா
Published on

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் சட்டோகிராமில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான இம்ராஹிம் ஜத்ரான் (21), இஹ்சானுல்லா (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரஹ்மத் ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடித்த ரஹ்மத் ஷா 102 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரஹ்மத் ஷா படைத்தார். அனுபவ வீரர் அஸ்கர் ஆப்கன் ஆட்டமிழக்காமல் 88 ரன்களும், விக்கெட் கீப்பர் அப்சர் சேசாய் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் அடிக்க ஆப்கானிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் அடித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com