3 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து நிலைகுலைந்த வங்காள தேசம்

டாக்கா டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காள தேசம் 110 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #BANvSL
மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய லக்மல்
மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய லக்மல்
Published on

பின்னர் வங்காள தேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. லித்தோன் தாஸ் 24 ரன்னுடனும், நைட்வாட்ச்மேன் ஹசன் மிராஸ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


க்ளீன் போல்டாகிய ரஹிம்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கிஙது. லித்தோன் தாஸ் மேலும் ஒரு ரன் எடுத்து 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து மெஹிதி ஹசன் மிராஸ் உடன் கேப்டன் மெஹ்முதுல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஹசன் நேர்த்தியாக விளைடினார். இதனால் வங்காள தேசம் 100 ரன்னைத் தாண்டியது.

அணியின் ஸ்கோர் 107 ரன்னாக இருக்கும்போது மெஹ்முதுல்லா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சபீர் ரஹ்மான் (0), அப்துர் ரசாக் (1), தைஜூல் இஸ்லாம் (1), முஸ்டாபிஜூர் ரஹ்மான் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது.


க்ளீன் போல்டாகிய லித்தோன் தாஸ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com