வங்காளதேசத்தில் தடையை மீறி பார்ட்டி: எல்.ஜி.பி.டி. அமைப்பைச் சேர்ந்த 29 பேர் கைது

வங்காளதேசத்தில் தடையை மீறி விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எல்.ஜி.பி.டி. அமைப்பைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
வங்காளதேசத்தில் தடையை மீறி பார்ட்டி: எல்.ஜி.பி.டி. அமைப்பைச் சேர்ந்த 29 பேர் கைது
Published on

வங்காளதேசத்தில் இயற்கைக்கு மாறான பாலியல் தொடர்பு கொள்ளும் ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது.

இந்நிலையில், ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விரும்பிகள், மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய எல்.ஜி.பி.டி. அமைப்பினர் நேற்று இரவு டாக்காவில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் பார்ட்டி நடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதிவிரைவு பட்டாலியன் படை வீரர்கள் அங்கு சென்று, எல்.ஜி.பி.டி. அமைப்பினைச் சேர்ந்த 29 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் என்றும், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு டாக்காவில் ஒன்றுகூடி பார்ட்டி நடத்தியபோது சிக்கியதாகவும் அதிவிரைவு பட்டாலியன் படை தெரிவித்துள்ளது. அவர்கள் பாலியல் உணர்வை தூண்டக்கூடிய தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com