இங்கிலாந்து வெற்றிக்கு 306 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தமீம் இக்பாலின் சதத்தால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 306 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.
இங்கிலாந்து வெற்றிக்கு 306 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்
Published on

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடனும், வங்காள தேசம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடனும் களம் இறங்கியது.

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:- 1. ஹேல்ஸ், 2. ஜேசன் ராய், 3. மோர்கன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. பட்லர், 6. மொயீன் அலி, 7. கிறிஸ் வோக்ஸ், 8. பிளங்கெட், 9. வுட், 10. ஜேக் பால் 11. ஜோ ரூட்

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:- 1. தமீம் இக்பால், 2. சவுமியா சர்கர், 3. இம்ருல் கெய்ஸ், 4. ஷகிப் அல் ஹசன், 5. முஷ்பிகுர் ரஹிம், 6. சபீர் ரஹ்மான், 7. மெஹ்முதுல்லா, 8. மொசாடெக் ஹொசைன், 9. மோர்தசா, 10. முஸ்டாபிஜூர் ரஹ்மான், 11. ருபெல் ஹொசைன்.

வங்காள தேசத்தின் தமீம் இக்பால், சவுமியா சர்கர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கத்திலேயே விக்கெட் இழந்து விடக்கூடாது என கவனமாக விளையாடினார்கள். முதல் நான்கு ஓவரில் வங்காள தேசம் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


79 ரன்கள் எடுத்த முஷ்டாபிகுர் ரஹிம்

வோக்ஸ் இரண்டு ஓவர்களில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2 ஓவர்கள் வீசிய அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 5-வது ஓவரை ஜேக் பால் வீசினார். இந்த ஓவரில் சவுமியா சர்கர் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதன்பின் வங்காள தேச வீரர்கள் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12 ஓவரில் 56 ரன்கள் சேர்த்தது. சவுமியா சர்கர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து இம்ருல் கெய்ஸ் களம் இறங்கினார்கள் இவர் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்காள தேசம் 21.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தமீம் இக்பால் 71 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். முஷ்பிகுர் ரஹிம் 48 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.

வங்காள தேசம் 37.1 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. அரைசதம் கடந்த தமீம் இக்பால் 124 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய தமீம் இக்பால் 142 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 128 ரன்கள் எடுத்து 45-வது ஓவரின் 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் முஷ்பிகுர் ரஹிம் 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.


நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பிளங்கெட்

அப்போது வங்காள தேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அதன்பின் வந்த ஷகிப் அல் ஹசன் 8 பந்தில் 10 ரன்களும், சபீர் ரஹ்மான் 15 பந்தில் 24 ரன்களும் எடுக்க, வங்காள தேசம் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com