கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூர் - கோவை இடையே அதிநவீன சொகுசு பஸ் இயக்கம்

பெங்களூர் மற்றும் கோவை இடையே அதிநவீன சொகுசு பஸ்சை கர்நாடக அரசு போக்கு வரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது.
கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூர் - கோவை இடையே அதிநவீன சொகுசு பஸ் இயக்கம்
Published on

பெங்களூரு:

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு அதிநவீன சொகுசு பஸ்சை கர்நாடக அரசு போக்கு வரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பஸ் பெங்களூரு, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் சென்றடையும்.

இந்த பஸ்சில் பயணம் செய்ய கட்டணம் ரூ. 1100 ஆகும். இந்த பஸ்சில் நவீன கழிப்பிடம், எல்.இ.டி. டிவி, இலவச வை-பை வசதிகள் உள்ளன. இருக்கையின் நடுவில் செல்போனை சார்ஜர் செய்யும் வசதியும் உள்ளது. பயணிகளுக்கு குடிநீர் பாட்டிலும் வழங்கப்படுகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com