கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - அமைச்சர் செங்கோட்டையன்

கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

கோவை:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

மத்திய அரசு கொண்டு வருகிற நீட் தேர்வு மற்றும் உள்ள பொது தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுதேர்வு முடிந்ததற்கு பிறகு மாணவர்களின் மனநிலையை மனதில் கொண்டு 4 ஆயிரம் மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 9 கல்லூரிகளில் இவர்களுக்கு தனிபயிற்சிகள் அளிக்கப்படும். இந்த பயிற்சிகள் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் மருத்துவ துறை மட்டுமல்ல, எந்த துறையிலும் தேர்வை சந்திக்கும் துணிவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பிளஸ்-2 முடித்த பிறகு மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றி தகவல் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளஸ்-2 முடித்த பிறகு மேற்கொண்டு படிப்பதற்கு 286 வகையான பாடத்திட்டங்கள் இருக்கிறது. இது குறித்து அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகைகளில் பாடதிட்டங்கள் குறித்த விவரங்கள் தெரியப்படுத்த அறுவுறுத்தி உள்ளோம். இதன் மூலம் குறிப்பிட்ட பாடம் என்றில்லாமல், அனைத்து வகையான பாடங்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்அடைய முடியும்.

கோடை விடுமுறை காலங்களில் தனியார் பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com