ஸ்ரீசாந்த் மீது நீடிக்கும் தடை: பி.சி.சி.ஐ. பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீசாந்த் மீது நீடிக்கும் தடை: பி.சி.சி.ஐ. பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பி.சி.சி.ஐ பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

புதுடெல்லி:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது இவர் மேட்ச் பிச்சில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து பி.சி.சி.ஐ. அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது.

அதன்பின்னர் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஸ்ரீசாந்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அவரை டெல்லி கோர்ட் விடுதலை செய்தது. என்றாலும் பி.சி.சி.ஐ. ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பி.சி.சி.ஐ. மேல்முறையீடு செய்தது. பி.சி.சி.ஐ.-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடையை நீக்கிய உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றது.  கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது. வழக்கு குறித்து 4 வாரங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com