கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வாசகம் பாகுபலி-2

கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் பாகுபலி-2 முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் ஆகிய வாசகங்கள் உள்ளன.
கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வாசகம் பாகுபலி-2
Published on

புதுடெல்லி:

கூகுள் தேடுதல் இயந்திரத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகம் தேடப்படும் வாசகம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படுவது உண்டு.  அவ்வகையில் இந்த வருடம் ஆதிக்கம் செலுத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் டிரெண்டிங் தொடர்பான பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. 

அதில், ராஜமவுலி இயக்கிய, பாக்ஸ் ஆபீசில் பல சாதனைகளை படைத்த பாகுபலி-2 திரைப்படம், அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் மொழிகளை கடந்து முதல் இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் என்ற வாசகம் 2வது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் என்ற வாசகம் 3வது இடத்திலும் உள்ளன. 

இந்த வருடத்திற்கான டாப் பொழுதுபோக்காளர்கள் வரிசையில் சன்னி லியோன் மீண்டும் முதல் இடத்தில் உள்ளார்.  தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆர்ஷி கான் மற்றும் சப்னா சவுத்ரி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.  அதற்கு அடுத்த இடத்தில் யூ டியூபில் பாடகி வித்யா வாக்ஸ் உள்ளார்.

இதேபோன்று இந்த வருடத்திற்கான டாப் நியூஸ் வரிசையில், சி.பி.எஸ்.இ. முடிவுகள், உத்தர பிரதேச தேர்தல், ஜி.எஸ்.டி. மற்றும் பட்ஜெட் ஆகியவை உள்ளன.

இதுதவிர, எப்படி ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பது, ஜியோ போன் வாங்குவது, ஹோலி வண்ணத்தினை முகத்தில் இருந்து நீக்குவது போன்ற விசயங்களும் லட்சக்கணக்கானோரால் தேடப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com