வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள்; யூனிஸ்கான் டக்அவுட்

பார்படோஸில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள்; யூனிஸ்கான் டக்அவுட்
Published on

சேஸின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. சேஸ் 131 ரன்னுடனும், ஜேசன் ஹோல்டர் 58 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சேஸ் முதல் நாள் எடுத்திருந்த 131 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். அதேபோல் ஹோல்டரும் நேற்றைய 58 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 98.5 ஓவரில் 312 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளும், மொகமது ஆமிர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக அசார் அலி, அகமது ஷேசாத் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்தது.

அகமது ஷேசாத் 70 ரன்கள் எடுத்த நிலையில் பிஷூ பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசம், யூனிஸ்கான் ஆகியோர் டக்அவுட் ஆகி வெளியேறினார்கள்.


70 ரன்கள் அடித்த அகமது ஷேசாத் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி

இதனால் 161 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து மிஸ்பா உல் ஹக் களம் இறங்கினார். அசார் அலியுடன் இணைந்து மிஸ்பா உல் ஹக் 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com