

சென்னை:
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ராணுவ வாகன தொழிற்சாலையில் ராணுவத்துக்கு தேவையான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு தற்போது நவீன பீரங்கி தயாரிக்கப்பட்டு உள்ளது. இது ஆள் இல்லாமல் ரிமோட் மூலம் இயங்க கூடியது. இதை நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் துணை ராணுவப் படையினர் பயன்படுத்த முடியும் என்று ராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கவும், அணு ஆயுதம், இயற்கை பேரிடர் மிரட்டல் போன்ற சமயங்களிலும் பயன்படுத்த முடியும். இந்த பீரங்கிக்கு ‘முந்த்ரா’ என பெயரிடப்பட்டு உள்ளது.
மொத்தம் 3 வகையான பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதில் ரிமோட் மூலம் இயங்கக்கூடிய 2 வகையான பீரங்கிகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி ஆவடி ராணுவ தொழிற்சாலையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
இது நாட்டிலேயே முதல் முறையாக தயாரான ஆள் இல்லாத பீரங்கி ஆகும்.