பயிற்சி ஆட்டம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவனை வீழ்த்தியது இங்கிலாந்து லெவன்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AUSvENG #Morgan
பயிற்சி ஆட்டம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவனை வீழ்த்தியது இங்கிலாந்து லெவன்
Published on

டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் டீன் 62 ரன்னும், ஹார்வி 59 ரன்னும், நெல்சன் 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து லெவன் அணியின் ரஷித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லெவன் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேசன் ராய் 40 ரன்னும், பேர்ஸ்டோவ் 36 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த ஹேல்ஸ் 35 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மோர்கன் அவுட்டாகாமல் 76 பந்தில் 81 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து லெவன் அணி 40.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 சேர்த்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com