ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா அணியில் இருந்து கிறிஸ் லைன் விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து கிறிஸ் லைன் விலகியுள்ளார். #AUSvENG #ChrisLynn
ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா அணியில் இருந்து கிறிஸ் லைன் விலகல்
Published on

ஆஷஸ் டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து வருகிற 14-ந்தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கிறிஸ் லின் இடம் பிடித்திருந்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் லின் மேக்ஸ்வெல்லை பின்னுக்குத் தள்ளி அணியில் இடம்பிடித்தார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கிறிஸ் லின் பங்கேற்று விளையாடி வருகிறார். பிக் பாஷ் லீக்கில் விளையாடும்போது கிறிஸ் லின்னிற்கு முழங்கால் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com