

நாளை 3-வது ஆட்டம் நடக்கிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற ஒரேயொரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 1974-75-ல் நடைபெற்ற ஒரேயொரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிகெட் தொடரை வென்றது கிடையாது.
2013-14-ல் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 எனவும், 2010-11-ல் 7 போட்டிகள் கொண்ட தொடரை 1-6 எனவும் இழந்திருந்தது. 1987-88, 1978-79-ல் நடைபெற்ற தொடரிலும் தோல்வியை சந்தித்திருந்தது.