ஆஷஸ் சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து இளம் வீரர் மேசன் கிரேன் அறிமுகம்

ஆஷஸ் தொடரில் சிட்னியில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணியில் இளம் வீரரான மேசன் கிரேன் அறிமுகமாக உள்ளார். #Ashes, #AUSvENG
ஆஷஸ் சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து இளம் வீரர் மேசன் கிரேன் அறிமுகம்
Published on

மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளை மறுநாள் (4-ந்தேதி) தொடங்குகிறது. சிட்னி ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதனால் ஆஸ்திரேலியா நாதன் லயன் உடன் அஷ்டோன் அகரையும் களம் இறக்க முடிவு செய்துள்ளது.

அதேபோல் இங்கிலாந்து அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக மொயீன் அலி உள்ளார். இவர் ஆஷஸ் தொடரில் சொதப்பி வருகிறார். அதேவேளையில் சிட்னி டெஸ்டில இங்கிலாந்து இரண்டு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்க விரும்பினால் 20 வயதான இளம் லெக் ஸ்பின்னர் மேசன் கிரேன் அறிமுகமாக வாய்ப்புள்ளது. மேலும், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்க விரும்பினால் மொயீன் அலி நீக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com