மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... ஆஸ்திரியாவில் முழு ஊரடங்கு அறிவிப்பு

திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார்.
பொது இடங்களில் போலீஸ் கண்காணிப்பு
பொது இடங்களில் போலீஸ் கண்காணிப்பு
Published on

வியன்னா:

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. 

ஆஸ்திரியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, தடுப்பூசி போடாத மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய் தொற்று ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளில் உள்ள வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரியா பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார். 

இந்த ஊரடங்கு குறைந்தது 10 நாட்கள் நீடிக்கும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இதேபோல் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை தொடங்கும் என்று ஸ்லோவாகியா பிரதமர் எட்வர்ட் ஹெகர் அறிவித்தார். மேலும் செக் குடியரசு அரசாங்கமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com