ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி, சிமோனா ஹாலெப் தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, 4-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ஆஷ்லே பார்டி, சிமோனா ஹாலெப்
ஆஷ்லே பார்டி, சிமோனா ஹாலெப்
Published on

நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி சொந்த மண்ணில் விளையாடியதால் அவருக்கு கூடுதல் பலமாக கருதப்பட்டது. ஆனால் சோபியா கெனின் அவரை திணறடித்தார். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சோபியா கெனின் 7(8) - 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.

மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் - ஸ்பெயினைச் சேர்ந்த முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தின.

முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் தரநிலை பெறாத முகுருசா 7(10) - 6(8) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் முகுருசா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com