ஆஸ்திரேலியா ஓபன்: டேனில் மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
டேனில் மெட்வதேவ்
டேனில் மெட்வதேவ்
Published on

ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ரஷியாவின் டேனில் மெட்வதேவ், கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

மெட்வதேவ் தரவரிசையில் 4-வது இடத்திலும், சிட்சிபாஸ் 5-வது இடத்திலும் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெட்வதேவ் ஆட்டத்திற்கு சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் மெட்வதேவ் 6-4, 6-2, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் மெட்வதேவ் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com