

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது
3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் நாளை மறுநாள் நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்திருந்தார்.
டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த உடன் 21-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு சிறந்த முறையில் புத்துணர்ச்சியுடன் தயாராகுவதற்காக பேட் கம்மின்ஸ்க்கு 3-வது டி20 போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
2-வது போட்டி நடைபெற்ற கான்பெர்ராவில் இருந்து பெர்த்துக்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இதனால் அவரது சொந்த நகரான சிட்னிக்கு திரும்பும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.