ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா
Published on

2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என  அதிரடியாக கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி பிளிஸ்கோவாவை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com