ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், கெர்பர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஹாலெப், கெர்பர் உள்ளிட்டோர் அரையிறுதிக்கு முன்னேறினர். #AusOpen #SimonaHalep #AngeliqueKerber
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், கெர்பர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாலெப் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய ஹாலெப் அந்த செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஹாலெப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், அமெரிக்க வீராங்கனையான மார்ட்டினா கீஸ்-ஐ எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை 6-1 என கெர்பர் எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கெர்பர் இரண்டாவது செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்ற கெர்பர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டிகளில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டிகளில் வோஸ்னியாகி - மெர்டென்ஸ், கெர்பர் - ஹாலெப் பலப்பரீட்சை செய்ய உள்ளனர். #AusOpen #SimonaHalep #AngeliqueKerber

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com