ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கிகி பெர்ட்டென்ஸ் தோல்வி, வோஸ்னியாக்கி, ஸ்டீபன்ஸ் வெற்றி
பெண்களுக்கான 2-வது சுற்றில் கிகி பெர்ட்டென்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்த நிலையில் வொஸ்னியாக்கி, ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AUSOpen
9-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் பவுலியுசென்கோவாவை எதிர்கொண்டார். அதில் கிகி பெர்ட்டன்ஸ் 6-3, 3-6, 3-6 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். அதேபோல் 20-ம் நிலை வீராங்கனையான கோன்டாவெயிட் 3-6, 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.