

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் இல்லை. தற்போது அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேவேளையில் 3-வது இடத்திற்கு மார்னஸ் லாபஸ்சான்னே கச்சிதமாக பொருந்தியுள்ளார். பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் மிகமிக உட்சத்தில் இருக்கிறார்.
இந்த கோடைக்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டிலும், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்டிலும் விளையாடியது. இரண்டு அணிகளையும் ஒயிட் வாஷ் செய்தது.
இந்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நாங்கள் தற்போது இரக்கமற்ற அணியாக திகழ்கிறோம். இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்த கோடைக்காலத்தில் ஐந்து போட்டிகளையும் வெல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வந்தேன். நாங்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்து உண்மையிலேயே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என நம்புகிறேன். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அதிகமான மேட்ச் வின்னர் வீரர்களை பெற்றுள்ளோம். கடந்த 12 மாதங்களில் சுமாராக விளையாடிய வீரர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த முறை விளையாடிய ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது முற்றிலும் மாறுபட்ட அணி. இரு அணி தொடர்களுக்கும் இடையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் உள்ளது. இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கும்.