இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்

சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்
Published on

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

2-வது போட்டி அக்டோபர் 30-ந்தேதி (நாளைமறுநாள்) நடக்கிறது. முதல் போட்டியில் பங்கேற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 2-வது போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

அவரது சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஸ்டார்க் சகோதரர் பிராண்டன் சிறந்த உயரம் தாண்டுல் வீரராவார். கடந்த வருடம் நடைபெற்ற கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்டார்க் இல்லாததால் பில்லி ஸ்டேன்லேக் அல்லது சீன் அப்போட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com