

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. விக்கெட் கீப்பரான டோனி பினிஷருக்கு பெயர் போனவர். எவ்வளவு ரன்ரேட் தேவையிருந்தாலும், பதற்றமடையாமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் வல்லமை படைத்தவர். தற்போதைய நிலையில் டோனி சிறந்த பினிஷராக பார்க்கப்படுகிறார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். டிவி வர்ணனையாளராகவும் செயல்படும் இவர், சமூக இணைதளங்கள் மூலம் கிரிக்கெட் ரசிகர்களடன் உரையாடி வருகிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, ரசிகர்களுக்கு கருத்துக் கணிப்பு கேள்விகளையும் கேட்கிறார்.
இந்தநிலையில் ரசிகர் ஒருவர் வாகனிடம் ‘‘உங்களுடைய ஒருநாள் அணியில் சிறந்த பினிஷராக்க விரும்பினீர்கள் என்றால், மைக்கேல் பெவனா? டோனியா?’’ என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு டோனிதான் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.