ஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் - பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி

ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். #ATPFinal #RogerFederer #KeiNishikori
ஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் - பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி
Published on

‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலை நகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-9-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் மோதினார்கள். 1 மணி 27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் பெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com