அசாம் மாநில தூதராக ஹிமாதாஸ் நியமனம்

அர்ஜூனா விருது பெற்ற இளம் ஓட்டப்பந்தைய வீரங்கனை ஹிமாதாஸ் அசாம் மாநில தூதராக முதல்- அமைச்சர் சர்பானாந்த் சோனாவால் நியமித்துள்ளார். #AssamAmbassador #himadas
அசாம் மாநில தூதராக ஹிமாதாஸ் நியமனம்
Published on: 

இளம் ஓட்டப்பந்தைய வீரங்கனையான ஹிமா தாஸ் உலக ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு சமீபத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கியது.

இதற்கிடையே 18 வயதான ஹிமா தாசை அசாம் மாநில தூதராக அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை அசாம் முதல்- அமைச்சர் சர்பானாந்த் சோனாவால் அறிவித்துள்ளார். #AssamAmbassador #himadas

X

Maalai Malar
www.maalaimalar.com