ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் சரிதா

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் சீமா மற்றும் பூஜா ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர்.
சரிதா
சரிதா
Published on

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டின் அல்மாத்தி நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சரிதா அரையிறுதிப் போட்டியில் கிர்கிஸ்தானின் நுரைடா அனார்குலோவாவை எதிர்கொண்டார். இதில் சரிதா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த ஷூவ்தோரை எதிர்கொள்கிறார்.

50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஜேஸ்மினாவிடம் 2-3 எனத் தோல்வியடைந்தார். வெண்கல பதக்கத்திற்காக தைபே வீராங்கனை யங் சுன் லின்-ஐ எதிர்கொள்கிறார்.

76 கிலோ எடைப்பிரிவில் பூஜா தோல்வியடைந்தார். வெண்கல பதக்கத்திற்காக போட்டியிட இருக்கிறார். 68 கிலோ எடைப்பிரிவில் நிஷா அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com