ஆசிய விளையாட்டு - துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளி வென்றார்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் மூன்று நிலை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார். #AsianGames2018 #SanjeevRajput
ஆசிய விளையாட்டு - துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளி வென்றார்
Published on

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பல்வேறு பிரிவுகளில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கமும், அபிஷேக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இப்பிரிவில் சீன வீரர் ஹுயி ஜிசெங் தங்கப்பதக்கமும் (453.3 புள்ளிகள்), ஜப்பான் வீரர் மத்சுமோட்டோ (441.4 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #AsianGames2018 #SanjeevRajput

X

Maalai Malar
www.maalaimalar.com