ஆசிய விளையாட்டு போட்டி- குத்துசண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமித் பதக்கத்தை உறுதி செய்தார்

ஆசிய விளையாட்டு போட்டி குத்துச் சண்டையில் காலிறுதியில் வெற்றி பெற்று விகாஸ் கிருஷ்ணன், அமித் பதக்கங்களை உறுதி செய்தனர். #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி- குத்துசண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமித் பதக்கத்தை உறுதி செய்தார்
Published on

அமித் பங்கல் (49 கிலோ பிரிவு), தீரஜ் (64 கிலோ பிரிவு), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ பிரிவு) சர்ஜு பாலா (51 கிலோ பிரிவு) ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.

இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. அமித் பனகல் வட கொரியாவை சேர்ந்த கிம்ஜாங்கை எதிர் கொண்டார். இதில் அமித் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் விகாஸ் கிருஷ்ணன் சீன வீரரை 3-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 3-வது முறையாக ஆசிய பதக்கத்தை விகாஸ் கிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com