ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்தியாவை வீழ்த்தியது சீனா ஆண்கள் அணி

மலேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டியில் சீனா ஆண்கள் அணி 3-1 என இந்தியாவை வீழ்த்தியது. #AsianBadmintonChampionships #Indiamen
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்தியாவை வீழ்த்தியது சீனா ஆண்கள் அணி
Published on

அலோர்செடார்:

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. 

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், சீனாவின் ஷி யூகியும் மோதினர். இதில் 14-21, 21-16, 21-7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

அதன்பின் நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராஜ் செட்டி ஜோடி, சீனாவின் ஹி ஜிட்டிங், டான்

கியாங் ஜோடியும் மோதியது. இதில் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் சீனா ஜோடி வெற்றி பெற்றது. இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில், இந்தியாவின் சாய் பிரனீத்தும், சீனாவின் கியாவோ பின்னும் விளையாடினர். இப்போட்டியில், 9-21, 21-11, 21-17 செட்களில் சீன வீரர் வென்றார். இதன்மூலம் சீனா 3-1 என முன்னிலை பெற்றது.

மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி, சுமீத் ரெட்டி ஜோடி, சீனாவின் ஹான் செங்காய், சோ ஹவுடங் ஜோடியிடம் 14-21, 21-19, 21-14 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இதன்மூலம் சீனா அணி 3-1 என வெற்றி பெற்றது. இதனால் இந்தியா ஆண்கள் அணி இத்தொடரைவிட்டு வெளியேறியது.

முன்னதாக நடைபெற்ற பெண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இந்தோனேசியா அணியிடம் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. #AsianBadmintonChampionships #Indiamen

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com