ஆசிய கோப்பை கிரிக்கெட்- ஹாங் காங்கை 116 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹாங் காங் அணி 116 ரன்னில் சுருண்டது #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
ஆசிய கோப்பை கிரிக்கெட்- ஹாங் காங்கை 116 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்
Published on

இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹாங் காங் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி ஹாங் காங் அணியின் நிஜாகட் கான், அன்ஷுமான் ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நிஜாகட் கான் 11 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ராத் 34 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த ஹயத் 7 ரன்னிலும், கார்ட்டெர் 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.


ரன்அவுட் ஆகிய ஹாங் காங் தொடக்க பேட்ஸ்மேன்

ஒரு கட்டத்தில் ஹாங் காங் 44 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்க சின்சிட் ஷா உடன் ஐஜாஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்தது. ஐஜாஸ் கான் 97 ரன்கள் எடுத்திருக்கும்போது 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த மெக்கென்சி (0), அஃப்ஜல் (0) ரன்ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்தும், கின்சிட் ஷா 26 ரன்னிலும் வெளியேற ஹாங் காங் 99 ரன்களுக்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.


சதாப் கான்

கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நவாஸ் (9), நதீம் அகமது (9) 17 ரன்கள் சேர்க்க ஹாங் காங் 35.1 ஓவரில் 116 எடுத்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி, சதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com