ஆசிய கோப்பை - நாட்டுக்காக ஒரு கையால் விளையாடிய தமிம் இக்பாலுக்கு குவியும் பாராட்டுகள்

ஆசிய கோப்பை போட்டியில் கை விரலில் ஏற்பட்ட காயத்தால் நாட்டுக்காக ஒரு கையால் மட்டுமே பேட் செய்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #AsiaCup2018 #TamimIqbal
ஆசிய கோப்பை - நாட்டுக்காக ஒரு கையால் விளையாடிய தமிம் இக்பாலுக்கு குவியும் பாராட்டுகள்
Published on

துபாய் :

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கியது.

துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணியின் சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

ஆட்டத்தின் இறுதியில் தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கினார். கை விரல் காயத்தால் அவதிப்பட்ட அவர், ஒரு கையால் மட்டுமே ஆடினார். கடைசி விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் 32 ரன்கள் சேர்த்தார்.

நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர்கள் குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து தமிம் இக்பால் வெளியேறியுள்ளார். #AsiaCup2018 #TamimIqbal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com