

இதனால், சுமித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்குமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில், சுமித் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டி சம்பளம் முழுவதும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, ஸ்டீவ் சுமித்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
‘வாழ்நாள் தடை என்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடுமையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமல்ல, எந்த வீரருக்கும் அதுபோன்ற தடையை விதிக்கக்கூடாது. தவறை ஒப்புக்கொண்டதால் அவர்களின் தவறை மன்னிக்க வேண்டும். ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்தது போதுமான தண்டனை என்று நான் நினைக்கிறேன்’ என நெஹ்ரா தெரிவித்தார்.