

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோரின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது.
தொடக்க வீரர்களாக ஜோ பேர்ன்ஸ் (9), ஜேசன் ராய் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஜோ ரூட் ஹசில்வுட் பந்தில் டக்அவுட் ஆனார். அதன்பின் இங்கிலாந்தின் விக்கெட்டுக்கள் சீட்டுக்கட்டுபோல் சரிய ஆரம்பித்தது. மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.