

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 251 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான பேட்டிங்கும், நாதன் லயனின் நேர்த்தியான பந்து வீச்சாலும் ஆஸ்திரேலியா இந்த வெற்றியை பெற்றது.
இந்த வெற்றி இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா பெற்ற 6-வது மிகப்பெரிய வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.