சிட்னி டெஸ்ட்: கஜாவா, மார்ஷ் சகோதரர்களால் 3-வது நாள் முடிவில் ஆஸி. 479-4

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்துள்ளது. #Ashes #AUSvENG
சதம் அடித்த மகிழ்ச்சியில் பேட்டை உயர்த்தும் கவாஜா
சதம் அடித்த மகிழ்ச்சியில் பேட்டை உயர்த்தும் கவாஜா
Published on

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜோ ரூட் (83), தாவித் மலன் (62) ஆகியோரின் அரைசதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீர்ர பான் கிராப்ட் டக்அவுட் ஆனாலும் அடுத்து வந்த கவாஜா வார்னர் உடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வார்னர் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.


ஷேன் மார்ஷ் பந்தை விரட்டும் காட்சி

கவாஜா சதத்தை நெருங்கிய நேரத்தில் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. கவாஜா 91 ரன்களுடனும், ஸ்மித் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா 67 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கஜாரா சதமும், ஸ்மித் அரைசதமும் அடித்தனர்.

தொடர்ந்து விளையாடிய ஸ்மித் 83 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். கவாஜா - ஸ்மித் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது.

4-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். 150 ரன்களை தாண்டி விளையாடிய கவாஜா 171 ரன்கள் எடுத்த நிலையில் மேசன் கிரேன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்திருந்தது.


அரைசதம் அடித்து களத்தில் நிற்கும் மார்ஷ் சகோதரர்கள்

5-வது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். மார்ஷ் சகோதரர்களாக இவர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் கடந்தனர். ஷேன் மார்ஷ் சதத்தை நெருங்கிய நிலையில் 3-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஷேன் மார்ஷ் 98 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 63 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com