ஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார்.
அரை சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித்
அரை சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித்
Published on

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதத்தை தவறவிட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com